வடக்கின் கல்வியை முன்னேற்ற நடவடிக்கை – பிரதமர்!
Monday, July 23rd, 2018
வடக்கிலுள்ள பாடசாலைகளுக்குத் தேவையான ஆசிரியர்களை இணைத்துக் கொண்டு பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளவில்லை எனவும் இது குறித்து வடமாகாண ஆளுநரிடமும் இராணுவத் தளபதியிடமும் தான் விசாரித்ததாகவும் அப்படியான ஒரு தீர்மானம் மேற்கொள்ளவில்லை என அவர்கள் கூறியதாகவும் பிரதமர் கூறினார்.
வடமாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றிய 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
தமிழ் மாணவன் தாக்கப்பட்டமையால் கிழக்கு பல்கலையில் வேலை நிறுத்தம்!
மகிழூர்தி வாங்கவுள்ளவர்களுக்கு மற்றும் பாவனையார்களுக்கு ஓர் நற்செய்தி!
சீனி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல் – சிமெந்து தட்டுப்பாடு தொடர்பிலும் அவதானம்!
|
|
|


