வசந்த முதலிகே உள்ளிட்ட 5 பேருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாட சந்தர்ப்பம்!

Tuesday, April 4th, 2023

கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் எதிர்ப்பில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சிலருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதற்கமைய, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 5 பேர் காவல்துறையினரால் கொழும்பு வோட் பிரதேசம் பகுதியிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அழைத்து செல்லப்பட்டு கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ருஹூனு, களனி, பௌத்த பாலி மற்றும் திறந்த பல்கலைக்கழகங்களில் இடம்பெறுவதாக கூறப்படும் மாணவர் அடக்குமுறையை தடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குள் நுழைய முற்பட்ட நிலையில் அவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து, அவர்கள் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களில் சிலர் கலந்துரையாடலுக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: