வகுப்பறைகளில் மாணவர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Wednesday, January 4th, 2023
வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சுற்றறிக்கை வெளியிட முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தரம் 1 முதல் 5 வரையான வகுப்பறைகளில் 40 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்கப்படக் கூடாது என்றும், தரம் 6 முதல் 11 வரை அதிகபட்சமாக 45 மாணவர்களை அனுமதிக்கலாம் என்றும் உள்ளது.
இதேவேளை, பாடசாலை மாணவர் சேர்க்கை நடைமுறையில் திருத்தம் மேற்கொள்ள கல்வி அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.
இதன்படி, தரம் 2 முதல் 11 வரையிலான பாடசாலை மாணவர் சேர்க்கை தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கூட்டு ஒப்பந்தத்தை இரத்து தொடர்பான ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்!
தேசிய மட்ட திறந்த மெய்வல்லுனா் போட்டியில் இ.போ.ச. வட பிராந்தியம் சாதனை!
நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கம்!
|
|
|


