லலித் ஜெயசிங்கவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் பிரதான நபரான சுவிஸ்குமாரை தப்பிக்க விட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ. ஜெயசிங்கவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்த்ரவிட்டுள்ளார்.
வழக்கு விசாரணை இன்று (04.09) ஊர்காவற்துறை நீதிமன்றில் பதில் நீதிவான் எஸ்.சபேசன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 14 நாட்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த யூலை மாதம் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் வடமாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
கப்பலின் தீ விபத்து குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிபுணர்கள் குழு வருகை!
இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை - அரசாங்கம...
தற்போது நிலவும் வறட்சி காரணமாக 46 ஆயிரத்து 904 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை அழிவு - விவசாய அமைச்சு தெரிவ...
|
|