லங்கா ஐஓசி இன்று 100 எண்ணெய் தாங்கிகளில் 1.5 மில்லியன் லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் என்பவை விநியோகம்!
Monday, July 11th, 2022
லங்கா ஐஓசி இன்று 100 எண்ணெய் தாங்கிகளில் 1.5 மில்லியன் லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் என்பவை விநியோகிக்கப்பட்டுள்ளது.
இவற்றை விநியோகிக்கும் பொழுத நோயாளர் காவுவண்டிகளுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.
இதேவேளை டீசல் தாங்கிய எரிபொருள் தாங்கி ஊர்தி ஒன்று ஹப்புத்தளை பகுதியில் இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலை எரிபொருள் முனையத்தில் இருந்து ஹப்புத்தளை நோக்கி பயணித்த போதே இன்று காலை இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான குறித்த எரிபொருள் தாங்கி ஊர்தியில் 33,000 லீற்றர் டீசல் இருந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
Related posts:
நாளை மறுதினம் தேர்தலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்த இறுதிகட்ட பேச்சு!
இலங்கை - சீஷெல்ஸ் இடையே உடன்படிக்கைகள் கைச்சாத்து!
எரிபொருள் நிலையங்களுக்கு 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பு - ரோந்து பணிகள் ஊடாகவும் கண்காணிப்பு என பொலிஸ் ...
|
|
|


