ரூபாவின் பெறுமதி கடந்த வார இறுதியில் 7.8 சதவீதத்தால் குறைந்துள்ளது – மத்திய வங்கி தெரிவிப்பு!
Monday, March 20th, 2023
கடந்த வார இறுதியில் அமெரிக்க டொலர் மற்றும் இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருந்தாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 7.8 சதவீதத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 7.6 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
அத்துடன் ஜப்பானிய யென், யூரோ மற்றும் ஸ்ரேலிங் பவுண் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இலங்கை ரூபா அதிகளவில் பெறுமதி குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாடத்திட்டத்தில் சட்டக்கல்வி - அமைச்சரவை அனுமதி!
அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவு - மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது பயங்கரவாத எதி...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்ட அனைவரும் கைது செய்யப்படுவ...
|
|
|


