ராஜதந்திர சேவைக்கு அரசியல் ரீதியான நியமனங்கள் மேற்கொள்ளப்படாது – திட்டவட்டமாக அரசாங்கம் அறிவிப்பு!
Sunday, October 30th, 2022
எதிர்வரும் காலங்களில் ராஜதந்திர சேவைக்கு அரசியல் ரீதியான நியமனங்கள் மேற்கொள்ளப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் காணப்படும் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் என்பனவற்றிற்கு அரசியல்வாதிகள் அல்லது அவர்களின் நண்பர்களை நியமிக்கும் வழக்கத்தை ஒழித்து, தகுதியானவர்களுக்கு மட்டும் நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதான நாடு ஒன்றில் கடமையாற்றி வரும் இட்டைக் குடியுரிமை கொண்ட தூதுவர் ஒருவர் அடிக்கடி களியாட்டங்களை நடாத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி இந்தியா, சீனா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு புதிய தூதரக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் !
அதிக நீர் வருகை - திறக்கப்பட்டது இரணைமடு குளத்தின் 12 வான் கதவுகள்!
வரி அதிகரிப்பு உணவு பொருட்களின் விலைகளை பாதிக்காது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்ட...
|
|
|


