ரஸ்ய ஜனாதிபதி புட்டினிற்கு எதிராக தடைகளை விதித்தது மேற்குலகம் !

ரஸ்ய ஜனாதிபதிக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் எதிராக மேற்குலக நாடுகள் தடைகளை விதித்துள்ளன.
விளாடிமிர் புட்டினிற்கும் சேர்கி லவ்ரோவிற்கும் எதிராக அமெரிக்கா பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியநாடுகள் இந்த தடைகளை அறிவித்துள்ளன.
புட்டினின் சொத்துக்கள் முடக்கப்படும் அவர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடுகளின் தலைவர்களிற்கு எதிராக இவ்வாறான தடைகள் விதிக்கப்படுவது வழமைக்கு மாறான விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியா மற்றும் பெலாரஸ் தலைவர்களிற்கு எதிராகவே இவ்வாறான தடைகள் சமீபத்தில் விதிக்கப்பட்டன.
அமெரிக்கா வெனிசூலா ஜனாதிபதி நிக்கொலஸ் மடுரே மற்றும் சிரிய ஜனாதிபதிக்கு எதிராக இவ்வாறான தடைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
தரமிக்க சேவைக்கு அமைச்சரவை அங்கிகாரம்!
பாதுகாப்பானது என்றால் மட்டுமே பாடசாலைகள் திறக்கப்படும் - பிரித்தானியா அறிவிப்பு!
இலங்கைக்கு செல்லும் தமது பிரஜைகளுக்கான வெளிநாட்டு பயண ஆலோசனைகளை புதுப்பித்தது பிரித்தானியா!
|
|