ரஷ்ய பாதுகாப்பு சபையின் செயலாளருடன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன விசேட சந்திப்பு!
Wednesday, September 1st, 2021
ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பத்ருஷோவுடன் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவின் அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன அவர்களின் தலைமையிலான குழு ரஷ்யாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பத்ருஷோவை சந்தித்தது.
நட்பு ரீதியானதாக இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு உட்பட இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
யாழ். போதனா மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு 7 ஆம் திகதி திறப்பு!
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு புதிய பேருந்துகள் கொள்வனவு!
கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இம்மாத இறுதியில் புதிதாக கிராம சேவகர்கள் நியமிக்கப்படுவர் - பிரதமர் தி...
|
|
|


