ரஷ்யக் கொடியுடன் வரும் எந்தவொரு விமானமும் தடுத்து வைக்கப்படாது -போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!!
Tuesday, April 11th, 2023
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான புதிய உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ரஷ்யக் கொடியுடன் கூடிய எந்தவொரு விமானத்தையும் தடுத்து வைக்கப் போவதில்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.
ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தரையிறக்கப்பட்டு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் பதிவாகி, ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
விமான சேவைகள் குறித்த இணையத்தளமான சிம்பல் ஃப்ளையிங் என்ற இணையத்தளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தடுக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பின்னர் விடுவிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்னர் தற்போது அந்த விமான சேவை மீண்டும் இலங்கைக்கான தமது பணியை முன்னெடுக்கிறது.
தற்போது இலங்கை வரும் சுற்றுலா பயணிகளில் அதிகமானோர் ரஷ்ய நாட்டு பிரஜைகளாக உள்ளமையினால் ரஷ்யா, இலங்கையின் முக்கிய சுற்றுலா சந்தையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


