ரவிராஜ் கொலை விவகாரம்: வழக்கை மீளவும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

Thursday, February 23rd, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை  தொடர்பான  வழக்கை மீளவும்  விசாரிக்க உத்தரவிடுமாறு ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ்  தாக்கல்  செய்த  மேன்முறையீடு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

நீண்ட காலமாக நடத்தப்பட்டுவந்த விசாரணைகளின் முடிவில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஐந்து சந்தேகநபர்களும் குற்றமற்றவர்கள் என் விசேட ஜுரிகள் சபை தீர்ப்பளித்திருந்தது.

எனினும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை விசேட ஜுரிகள்  சபை முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது சட்டத்துக்கு முரணானது  எனவும் எனவே இந்த வழக்கின் தீர்ப்பை ரத்துச்செய்து  வழக்கை மீளவிசாரணை செய்யுமாறும் உத்தரவிடக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் குறித்த மனு மார்ச் 28 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் தகவலளிக்கும் படி, சட்டமா அதிபர் மற்றும் விடுவிக்கப்பட்ட ஐவருக்கும்  கடிதம்  அனுப்புமாறும் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

15590255_2020804057950791_5373772913664270958_n_copy

Related posts: