ரயில் மோதி இளம் தாய் பலி – சாலியபுரத்தில் அனர்த்தம்!
Friday, May 29th, 2026
….
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு ரயிலில் மோதி, பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம், சாலியபுர பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் சாலியபுரத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார்.
சுயதொழில் செய்து வந்த அவர், அநுராதபுரத்தில் உள்ள கடை ஒன்றில் ‘ஐஸ் பக்கெட்டுகளை’ விற்பனை செய்துவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலியபுர பகுதியில் உள்ள ஒரு பாதுகாப்பற்ற ரயில் கடவை இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த ரயில் கடவையில் பாதுகாப்பு கதவுகள் இல்லை எனவும், எவ்விதமான காவலர்களும் பணியில் அமர்த்தப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இந்த பாதுகாப்பற்ற நிலையே ஒரு இளம் தாயின் உயிரைப் பறித்துள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
Related posts:
உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
இன்று தீபாவளி பண்டிகை – உலகெங்கும் வாழும் கொண்டாடி மகிழ்வு!
ஜனாதிபதித் தேர்தலை 21 ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தயாராக இல்லை - ஜனாதிபதி ரணில் விக...
|
|
|


