ரயில் கடவைகளில் ஒலியுடனான மின்சார கதவு!
Monday, January 2nd, 2017
ரயில் கடவைகளில் பயன்படுத்தப்படும் மூங்கில்களுக்குப் பதிலாக மணி ஒலியுடனான மின்சார கதவு அமைக்கப்படவுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகள் இந்த வருடம் ஆரம்பிக்கப்படும் என்றும் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முதலாவது கட்டத்தின் கீழ் 300 இடங்களில் இவை பொருத்தப்படவுள்ளது. இதற்கான கேள்வி மனு தொடர்பான பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 200 இடங்களுக்கு மின்சார வேலிகளை பொருத்துவதற்கான கேள்வி மனுக்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
மூங்கில்கள் பயன்படுத்தப்பட்டுள்ள கடவைகள் மொத்தமாக 670 உள்ளன. இந்த அனைத்து இடங்களுக்கும் 3 வருடங்களுக்குள் நவீன மின்சார கதவுகள் பொருத்தப்படும் என்று தெரிவித்தார்.
ரயில் பாதைகளில் நடந்து செல்வது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பாதையில் செல்வோர் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். ரயில் பாதையில் நடந்து செல்வதனால் ஒரு மாதத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 30 ஆகக் காணப்பட்டுள்ளதுடன் வருடத்தில் இந்த எண்ணிக்கை 360ற்கும் அதிகமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ரயில் கடவைகளை கடக்கும் போது இறப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாக தெரிவித்த அவர் அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு இவற்றை அமைப்பதாகவும் கூறினார்.

Related posts:
|
|
|


