ரயில்வே பணிப்புறக்கணிப்பு : போக்குவரத்தில் இடையூறெனின் உடன் அழைக்கவும்!
Friday, August 10th, 2018
ரயில்வே பணிப்புறக்கணிப்பை அடுத்து இலங்கை போக்குவரத்து சபை, பயணிகளுக்கான பேருந்து சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.
இதனடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது 500 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை புகையிரத பருவகால சீட்டை வைத்துள்ள பயணிகள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் இலவசமாக பயணிக்க முடியும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இவை தொடர்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்குமாயின் அது தொடர்பாக 0117 505 555 என்ற தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்து!
வாடகை வீடுகளில் வாழும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவு விலையில் நிரந்தர வீடு - அரசாங...
தோட்டத்தொழிலார்களுக்கு இலவச காணிகளை வழங்குவதாக அரசாங்கம் அறிவிப்பு - அமைச்சர் ஜீவன் தொண்டமான் வரவேற...
|
|
|


