“ரப்” கருவி தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Wednesday, December 9th, 2020
தற்போது அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு “ரப்” கருவி இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அண்மைய நாட்களில் சமூக ஊடகங்களில் பாடசாலை மாணவர்களுக்கு “ரப்” கருவி இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் உள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்படுகின்றது.
எனினும், அவ்வாறு “ரப்” கருவியை வழங்குவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஏமாற்றும் வகையில் சமூக ஊடகங்களில் இவ்வாறான செய்தி வெளியிடப்படுகின்றது.
எனவே கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவித்தல்களை மாத்திரம் ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. அதேநேரம் “ரப்” கருவியை வழங்குவது தொடர்பில் எதிர்காலத்தில் அறியப்படுத்துவதாக கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


