ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு!
Wednesday, June 16th, 2021
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாடளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றுத் தோல்வியை சந்தித்திருந்த நிலையில் அக்கட்சிக்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்திருந்தது.
கடும் இழுபறிக்கு மத்தியில் கடந்த வாரம் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேசியப் பட்டியல் ஆசனத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் பெயர், குறித்த நியமனத்திற்காக, கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிவிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
24 மணித்தில் வாகன விபத்துக்களில் 15 பேர் பலி!
சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு பதிலாக சர்வகட்சி ஆட்சிமுறை – ஜனாதிபதி ரணிலின் விக்கரமசிங்க முன்மொழிவு!
இராணுவ பிரிவினரால் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு உதவி!
|
|
|


