ரசிகர்களிடம் ரணதுங்கா வேண்டுகோள்

Friday, September 1st, 2017

கிரிக்கெட் மைதானத்தில் இந்திய ரசிகர்களை போல நடந்து கொள்ளாதீர்கள் என இலங்கை ரசிகர்களுக்கு அர்ஜூனா ரணதுங்கா கோரிக்கை வைத்துள்ளார்.

இலங்கை – இந்தியா இடையில் நடைப்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தோல்வியை தாங்கி கொள்ள முடியாத அந்நாட்டு ரசிகர்கள் பாட்டில்கள் மற்றும் செருப்புகளை மைதானத்தில் வீசி ரகளை செய்தனர்

இதனால் ஆட்டம் அரை மணி நேரம் தடைப்பட்டது. இது குறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் அர்ஜூனா ரணதுங்கா கூறுகையில், இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது.இலங்கை மக்கள் கிரிக்கெட்டை நேசிக்கிறார்கள். அணி தோல்வியடைந்தால் அவர்கள் மனம் வருந்துவார்கள்.கிரிக்கெட்டுக்காக நாங்கள் பல தியாகங்கள் செய்துள்ள்ளோம். நான் இலங்கை ரசிகர்களிடம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் இந்திய ரசிகர்கள் போல நடந்து கொள்ள வேண்டாம்.நமக்கென்று நல்ல கலாச்சாரமும், வரலாறும் உள்ளது. இது போன்ற தவறான நடத்தைகள் நம் கலாச்சாரத்தில் ஏற்று கொள்ளப்படாது என ரணதுங்கா கூறியுள்ளார்.ரணதுங்கா இலங்கை அணி தலைவராக இருந்த 1996 உலக கிண்ண போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது.இந்தியாவில் நடந்த அந்த போட்டியின் போது இந்திய ரசிகர்கள் மைதானத்துக்குள் தண்ணீர் பாட்டில்களை தூக்கி போட்டும், நாற்காலிகளை தீயிட்டு கொளுத்தியும் ரகளை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: