யூரியா உரத்தை 5000 ரூபாவுக்கும் குறைவான விலையில் வழங்க நடவடிக்கை – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
Monday, June 12th, 2023
அடுத்த பெரும்போகத்திலிருந்து ஒரு மூடை யூரியா உரத்தை 5 000 ரூபாவுக்கும் குறைவான விலையில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நேற்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 22, 500 மெற்றிக் டன் யூரியா உரத்தை பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் யூரியா உர மூடை ஒன்றின் விலையை 9 ஆயிரம் ரூபா வரை குறைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மின்சாரத் தடையைக் கட்டுப்படுத்த விசேட மின் சட்டமூலம்!
மக்களை ஏமாற்றும் தந்திரமே எரிபொருள் விலைச் சூத்திரம் - ஜே.வி.பி !
இலங்கையர்களில் 49 இலட்சம் பேருக்கு உணவு உதவி தேவைப்படுகிறது - ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதி...
|
|
|


