யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ஆர்.எஸ்.தமிந்த பதவியேற்பு!
Tuesday, April 2nd, 2019
யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய பாலித பெர்னாண்டோ, கடந்த மாதம் ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் அவரது ஓய்வுக்குப் பின் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஆர்.எஸ்.தமிந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் நலன்புரிப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர்.எஸ்.தமிந்த, இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நேற்று மாலை பதவியேற்பு இடம்பெற்றது. சமய வழிபாடுகளைத் தொடர்ந்து மதத் தலைவர்களின் ஆசியுடன் வைபவரீதியாக மாலை 3.50 மணியளவில் பிரதி பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
Related posts:
எரிபொருளுக்காக மாதாந்தம் 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக தொகை செலவிடப்படுகிறது - வலுசக்தி அம...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் - விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கு...
வேலைநிறுத்தம் செய்வதற்கு இது சரியான நேரம் அல்ல - புதிய சுற்று நிருபங்களின் பிரகாரம் செயற்படுமாறு சாக...
|
|
|
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அமைதியான முறையிலும் அரசியலமைப்பு ரீதியிலும் தீர்த்து வைப்பதற்கான சந...
எரிபொருள் கொள்வனவிற்கு பணமில்லை - மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விரைவில் ஊட்டச்சத்து - சுகாதார அமைச்சின் செயலா...


