மாவட்ட நிலையில் முதல் இடம் பெற்ற வஜினாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள்!

உயர்தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் யாழ் மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற வஜினாவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் நேரில் சென்று பாராட்டியதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.
வெளிவந்த 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் யாழ் மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்றிருந்தார்..
பண்டத்தரிப்பு சாந்தை மண்ணிற்கு பெருமை சேர்த்த பாலகிருஷ்ணன் வஜீனாவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன், வலிகாமம் தென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன்டன்ஜோன்சன் (ஜீவா), கட்சியின் வலிகாமம் தென்மேற்கு பிரதேச உதவி நிர்வாக செயலாளர் குலம் ஆகியோர் நேரில் சென்று பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
000
Related posts:
|
|