யாழ் மாவட்டத்தில் கருவாடுகளின் உற்பத்தி அதிகரிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கருவாடுகளின் உற்பத்தி இந்த வருடம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருவாடு உற்பத்தியை அதிகரிக்கும் முகமாக உற்பத்தியாளர்களுக்குச் சிறப்புப் பயிற்சி மற்றும் உற்பத்திக்கான உபகரணங்கள் போன்றவற்றை கடந்த காலங்களில் நீரியல்வளத் திணைக்களம் வழங்கியது. இதையடுத்தே அதிகமானோர் கருவாட்டு உற்பத்தியில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
தீவுப் பகுதி, வடமராட்சி கிழக்கு மற்றும் குருநகர் போன்ற இடங்களில் கருவாட்டு உற்பத்திகள் அதிகளவில் இடம்பெற்றன என்று கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் தெரிவித்தது. கட்டா, சூடை, பாரை போன்ற மீன்களே அதிகளவில் கருவாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஏனையவற்றை விட மேற்குறிப்பிட்ட கருவாடுகளுக்கே அதிக கிராக்கி இருந்தது. தற்போது மழைக்காலம் ஆகையால் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் மீண்டும் கருவாட்டு உற்பத்திகள் மேற்கொள்ளப்படும் என்று நீரியல்வளத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டது.
Related posts:
|
|