யாழ்.மாவட்டத்தில் அதிக விலைக்கு பொருட்களைவிற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக பாவனையாளர் அதிகாரசபை அதிரடி நடவடிக்கை!
Tuesday, September 7th, 2021
யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய நிலை நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாக பாவனையாளர் அதிகாரசபை வர்த்தக நிலையங்களில் ஆய்வு நடத்தியுள்ளது.
யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கொக்குவில், இணுவில், மருதனார்மடம், சுன்னாகம், பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை ஆகிய பிரதேசங்களில் உள்ள வர்த்தகநிலையங்களில் இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனை நடவடிக்கையின்போது அரசின் வர்த்தமானி பிரசுரத்திற்கு மாறாக அதிக விலையில் பொருட்கள் விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு- தகவல் தொழில்நுட்பப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த!
பணிப்புறக்கணிப்பானது கவலையான விடயம் – ஜனாதிபதி.!
மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால்...
|
|
|


