யாழ் மாநகர பகுதி குளங்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களின் நிலைமைகள் தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் சாந்தாதேவி கள ஆய்வு!

Tuesday, August 8th, 2023

யாழ் மாநகரசபை ஆழுகைக்குள் இருக்கும் குளங்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களின் நிலைமைகள் மற்றும் தூர்வாரப்படவேண்டிய இடங்கள் தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் சாந்தாதேவி தர்மரட்ணம் கள ஆய்வு மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தறிந்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளர் இளங்கோ றீகன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நேற்றையதினம் குறித்த கள வியஜம் முன்னெடுக்கப்பட்டுள்ளது   

நாட்டில் டெங்கு தொற்று அதிகரித்துள்ள நிலையில் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் அடுத்துவரும் சில மாதங்களில் பருவ மழை ஆரம்பிக்கவுள்ள நிலையிலேயே குறித்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக  இணைப்பாளர் சாந்தாதேவி தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாநரசபையினர் முயற்சிகளை மேற்கொண்டாலும் டெங்குத் தொற்றின் தாக்கம் ஏனைய பிரதேசங்களை விட அதிகமாகவே இருந்துவருதை சுகாதார பிரிவின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

இதற்கு கழிவுநீர் வாய்க்கால்களின் தாக்கமும் ஒரு முக்கிய காரணமாக இருந்துவருகின்றது. அதாவது குறித்த வாய்க்கால்கள் மற்றும் குளங்கள் தூர்வாரப்படாத காரணத்தால் நீர் வழிந்தோட முடியாத நிலை தொடர்கதையாகவே இருந்துவருவதாக மக்கள் குற்றம் சுமத்திவருகின்றனர்.

இந்நிலையிலேயே நகரப்பகுதியில் காணப்படும் ஒரு சில குளங்களின் நிலைமை மற்றும் நீர் வழிந்தோடும் வாய்க்கால்களின் தூர்வார்தல் தொடர்பில் ஒருங்கிணைப்பு குழுவின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து குறித்த பகுதிகளுக்கு கள ஆய்வினை மேற்கொண்டு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டதுடன் அதை சீர்செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொர்பில் துறைசார் அதிகாரிகளது கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை மேற்கொள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

000

Related posts: