ஜீ.சீ.ஈ.சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிறது.

Tuesday, December 6th, 2016

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிறது.  சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் அமைந்துள்ள ஐயாயிரத்து 669 மத்திய நிலையங்களில் ஏழு இலட்சத்திற்கும் அதிமாக மாணவர்கள் தோற்றுகிறார்கள். புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களின் கீழ் பரீட்சை இடம்பெறவுள்ளது.

காலை 8.30க்கு பரீட்சை ஆரம்பமாகும். மாணவர்கள் 8 மணி அளவில் பரீட்சை மண்டபங்களுக்கு செல்ல வேண்டுமென்று அவர் கேட்டுள்ளார்.

ஆளடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டை பயன்படுத்தலாம். அனுமதிப்பத்திரத்தில் இடம்பெற்றுள்ள பாடம், மொழி, உறுதிப்படுத்த பாடவிதானங்கள் போன்ற விடயங்கள் மீது கவனம் செலுத்துவது அவசியமாகும்.

கைத்தொலைபேசி, இலத்திரனியல் உபகரணங்கள், குறிப்புக்கள் போன்றவற்றை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளன. பரீட்சை மோசடிகளுடன் தொடர்புடைய விடயங்கள் இடம்பெற்றால், உரிய பரீட்சார்த்தியின் பெறுபேறுகள் இரத்துச் செய்யப்படும். அவர் ஏனைய பரீட்சைகளுக்கு தோற்றுவது தடை செய்யப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார்.

இதேவேளை, பரீட்சை மண்டபத்தில் ஏதேனும் மோசடிகள் இடம்பெற்றால் தொலைபேசி மூலம் முறையிடலாம். அழைக்க வேண்டிய இலக்கம் 1911 என்பதாகும். பொலிசாருக்கும் இது தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்கலாம், தொலைபேசி இலக்கம் 119 என்பதாகும். வேறு ஒருவருக்காக பரீட்சை எழுதுபவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. இவ்வாறானவர்களை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

exam

Related posts: