யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் பத்துக் குவிவாடிகளைப் பொருத்த நடவடிக்கை

யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் பத்துக் குவிவாடிகளைப் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட முக்கிய பிரதான வீதீகளின் திருப்பு முனைகளில் குவிவாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. இவ்வாறு பொருத்தப்பட்ட குவிவாடிகளில் இரு குவி வாடிகள் இனம் தெரியாத விஷமிகளால் அடித்து உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்துவதற்காகப் பத்துக் குவிவாடிகள் கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வட்டக்கச்சி மாயவனூர் மத்தி கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங...
தபால் மூல வாக்காளர்களுக்கு மேலும் இருநாள் சந்தர்ப்பம் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றிற்கு பாதிப்பு - நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்ப...
|
|