யாழ் மாநகரில் நட்டிருக்கும் கம்பங்களுக்கு அனுமதி பெறாவிடின் அகற்றப்படும்!

Thursday, January 24th, 2019

யாழ்ப்பாண மாநகரசபை ஆளுகைப் பகுதியில் இலங்கை மின்சார சபை மற்றும் தொலைத்தொடர்பு நிலையம் ஆகிய 2 அரச நிறுவனங்கள் தவிர்ந்த ஏனையவற்றின் கம்பங்கள் நடப்பட்டிருப்பின் அவற்றுக்கு உரிய நடைமுறைப்படி அனுமதி பெறவும். தவறின் கண்டிப்பாக அகற்றப்படும்.

யாழ் மாநகர பரப்புக்குள் அனுமதியின்றி கம்பங்களை எந்தவொரு தனியார் நிறுவனமோ கேபிள் இணைப்பு நிறுவனமோ முறைப்படி விண்ணப்பித்து சபையின் ஆராய்வுக்குப் பின்னர் பாதிப்பு இல்லை எனக் கண்டறியப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும். பரிசீலனையின் பின்னர் சபைக்குரிய வரியைச் செலுத்தி முறைப்படி அனுமதியைப் பெற்ற பின்னரே கம்பங்களை நடமுடியும். எந்த நிறுவனமானாலும் அனுமதியின்றிக் கம்பங்கள் நட்டிருப்பின் உடனடியாகவே மாநகர சபையுடன் உரிய முறையில் தொடர்புகொண்டு விண்ணப்பித்து உறுதி செய்ய வேண்டும்.

சில இடங்களில் நட்ட கம்பங்களை மாநகர சபை பிடுங்கியிருந்தது. சபைக்கு எதிராக தனியார் தரப்பினர் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு விசாரணையின் பின்னர் மாநகரசபை எடுக்கும் தீர்மானம் சரி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

Related posts: