யாழ் மாநகரின் கரையோரத்தில் இடிதாங்கி அமைப்பதில் பின்நிற்பது ஏன்? – ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறுப்பினர் டேமியன்!

யாழ் மாநகரின் கரையோர பகுதி மக்களதும், கடற்றொழிலாளர்களதும் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதில் துறைசார் தரப்பினர் அக்கறை கொள்ளாது அசமந்தமாக இருப்பது ஏன் என ஈழ மக்கள் ஜநானாயக கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் டேமியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் நடைபெற்றது. இதன்போதே ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்களிடம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
யாழ்ப்பாணம் பிரதேசத்தின் கடற்கரை பிரதேசத்தை அண்டி ஒரு இடிதாங்கி அமைக்கப்பட வேண்டும் என கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின்போது நாம் கோரிக்கை முன்வைத்திருந்தோம். அன்றையதினம் குறித்த விடயம் தொடர்பில் இந்த கூட்டத்தில் முதல் விடயமாக எடுத்து அதுதொடர்பில் ஆராய்ந்து தீர்வு எட்டப்படும் என இணைத் தலைவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இது விடம் தொடர்பில் இந்த கூட்டத்தின் போது எதுவிதமான விடயமும் ஆராயப்படவில்லை. இந்த அசமந்த நிலை ஏன்? இங்குகுள்ள கரையோரப் பகுதி மக்கள் இடி மின்னல் காரணமாக கடற்றொரிலுக்கு செல்லும் நேரங்களில் ஒவ்வொரு வருடமும் பலியெடுக்கப்படுகின்றனர். இது குறித்த தரப்பினரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டும் உரிய தீர்வு தரப்படவில்லை. இங்குள்ள மக்கள் வாக்கு தேவைகளுக்கு மட்டுமா தேவைப்படுகின்றனர். அல்லது கரையோர பகுதி மக்களின் உயிர்கள் பெறுமதியற்றனவா? இது தொடர்பில் இதற்கு தகுந்த தீர்வு தரப்படவேண்டும் என டேமியன் வலியுறுத்தியிருந்தார்.
ஆனாலும் குறித்த விடயம் தொடர்பில் உறுப்பினர் டேமியன் கோரிக்கை விடுத்தபோது இணைத்தலைவர்கள் அதற்கு எதுவித பதிலும் வழங்காது குறித்த கூட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|