யாழ் மாநகரசபை அசமந்தம்: வாய்க்காலைப் புனரமைக்குமாறு குருநகர் பகுதி மக்கள் கோரிக்கை!

யாழ். குருநகர் மத்திய கிழக்கு வீதியின் ஆரம்ப வாய்க்கால் தூர்ந்து போன நிலையிலும் குன்றும் குழியுமாக பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படுகிறது.
மேலும் இந்த வாய்க்காலில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு நுளம்புப் பெருக்கத்துக்கு ஏதுவாக அமைகின்ற சுகாதாரச் சீர்கேடுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே இவ் வாய்க்காலை புனர்நிர்மாணம் செய்து தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
எனவே மழைகாலம் நெருங்குவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து இவ் வாய்க்காலை புனர்நிர்மாணம் செய்து தரும்படி இப்பிரதேச வாழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related posts:
நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை மோசடி குறித்து GMOA வெளியிட்ட கருத்து
பாடசாலைகளின் கல்விச் செயற்பாட்டை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர்கள் ...
மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை – வடக்கின் அளுநர் அறிவிப்பு!
|
|