யாழ் மாநகரசபையின் அவசர செலவுகளிற்காக மாதாந்தம் 16இலட்சம் ஒதுக்கீடு!
Tuesday, May 8th, 2018
யாழ் மாநகர சபையின் 2 ஆவது அமர்வு மாநகர முதல்வர் ஆனோல்ட் தலமையில் சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இன்றய அமர்வில் மாநகரசபையின் திட்டமிட்ட செயற்திட்டங்களை முன்னெடுக்கும் பொருட்டு சகலகட்சிகளையும் உள்டடக்கியதாக 6 அங்கத்தவர்களை கொண்ட 7 குழுக்கள் தெரிவுசெய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் நிதிக்குழு , பராமரிப்புக்குழு, சமயம் மற்றும் கலாசாரக்குழு, சுகாதாரக்குழு, இலஞ்சம் மற்றும் ஊழல்கண்காணிப்புக்குழு, பெண்கள் சிறுவர்கள் விவகாரங்கள் குழு , கல்வி விளையாட்டு நலன்புரி ஆகிய குழுக்கள் தெரிவுசெய்யப்பட்டு சபையின் அங்கிகாரம் பெறப்பட்டது.
தொடர்ந்து மாநகரசபையின் திட்டமிட்ட அபிவிருத்தி செலவுகள் தவிர்ந்த அவசர செலவுகளின் உச்ச எல்லை தொடர்பில் கவனம்செலுத்தப்பட்டு நீண்டநேர வாதப்பிரதிவாதங்களின் பின்னர் ஆணையாளருக்கு 125000 ஆகவும் மாநகர முதல்வருக்கு ஐந்து இலட்சம் ஆகவும் நியமிக்கப்பட்ட நிதிக்குழுவிற்கு பத்து இலட்சமாகவும் மாதாந்த செவலாக தீர்மானிக்கப்பட்டு சபையின் அங்கிகாரம் பெறப்பட்டது.
இருப்பினும் மாதாந்த திடிர் செலவுகளிற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை எனில் மீண்டும் மாற்றங்கள் செய்வதாகவும் முடிவுகள் எட்டப்பட்டன.
Related posts: