யாழ் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இன்று யாழ். வருகை!
Friday, September 9th, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (09) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு தின சிறப்பு நிகழ்வுகளை சிறப்பிக்கும் வகையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பின் பேரில் குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகைதருவுள்ளார்.
இன்று காலை விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி யாழ்.சுப்ரமணியம் பூங்காவில் இடம்பெறும் போதை ஒழிப்பு நிகழ்வில் பங்கேற்கவுள்ளதுடன் யாழ்.பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடத் தொகுதியை இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால திறந்துவைக்கவுள்ளார்.

Related posts:
சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிட வசதிகளுக்கு ஏற்பாடு!
உணவு உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள்!
அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவத அமைச்சரவை தீர்மானம்!
|
|
|


