யாழ். போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனை இடைநிறுத்தம்!

Wednesday, February 9th, 2022

வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனை நாளை 10 ஆம் திகதிமுதல் யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படவுள்ளது.

அதனடிப்படையில் வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனைகள் நாளைமுதல் மறு அறிவித்தல்வரை யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்படுவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

3.2 மில்லியன் நலன்புரி விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்தது - நலன்புரி நன்மைகள் சபை தெரிவிப்பு!
சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பகவிருட்சம் பெண்கள் – சர்வதேச மகளிர் தின செய்த...
நாட்டில் மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரை - துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் ...