யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நந்தகுமாரன் தற்காலிகமாக நியமனம்!
Tuesday, January 4th, 2022
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் கே.நந்தகுமாரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் நேற்றையதினம் இந்நியமனக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று அவர் தனது பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த வைத்தியர். சத்தியமூர்த்தி மேற்படிப்புக்காக மீண்டும் வெளிநாடு சென்றுள்ள காரணத்தினால் தற்காலிகமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை வைத்தியர் கே.நந்தகுமாரன் வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளராகவும் தொடர்ந்து செயற்படவுள்ளார்
Related posts:
சித்திரை 15 அரச பொது விடுமுறை தினமாக அறிவிப்பு !
புதிய அமைச்சரவை தொடர்பில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை – சில தினங்களுக்குள் ஜனாதிபதி தலைமையில் ஆளுந்...
நல்ல முட்டையிடும் கோழியைக் கொன்று சாப்பிடும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை - இராஜாங்க அமைச்சர் திலும்...
|
|
|
மாணவர்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்ற கோவில்களின் ஒலிபெருக்கிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை நீதி...
வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பு - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான...
அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரண திட்டத்தின் கீழ் 24 இலட்சம் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படு...


