யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரைக் காணவில்லை!

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த-15.03.2018 அன்று சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட 63 வயதுடைய எஸ்.பரமானந்தன் என்ற முதியவர் கடந்த-17 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
இவர் உரையாடுவதற்குச் சிரமப்படுவார்.சில நேரங்களில் அசாதாரணமான நடத்தைகளையும் வெளிப்படுத்துவார்.
சிவபூமி முதியோர் இல்லத்தைச் சேர்ந்த இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ரி. சத்தியமூர்த்தி கேட்டுள்ளார்.
Related posts:
சேர்பியாவின் முதலாவது உதவிப் பிரதமர் இலங்கை விஜயம்!
ஊரடங்கு சட்டத்தை மாகாண மட்டத்தில் தளர்த்த ஜனாதிபதி தீர்மானம்? - ஜனாதிபதி செயலகம்!
கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு நிவாரணம் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷ...
|
|