யாழ். புங்குடுதீவில் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கண்ணகை அம்மன் ஆலய குடமுழுக்கு!

Sunday, June 25th, 2023

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் என அழைக்கப்படும்  ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண ஏகோன்ன பஞ்சாசத் (49) குண்டபஷ மஹாயாக, மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று(25) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

ஐந்து இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அழகிய ஆலயமாக புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம் வர்ணிக்கப்படுகின்றது. புங்குடுதீவிற்கே இந்த ஆலயம் வரலாற்று பெருமை மிக்க ஆலயமாக கருதப்படுகின்றது.

இந்நிலையில் கண்ணகி அம்மன் என வழங்கும் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய திருக்குடமுழுக்கு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: