யாழ் பழக்கடைகளில் மருந்தடித்த பழங்கள் – முன்னாள் முதல்வர் சுட்டிக்காட்டு!

Tuesday, August 21st, 2018

யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக் கடைகளில் மருந்து செலுத்தப்பட்ட பழங்களே அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநகர சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாண நகரப் பகுதியில் பேருந்து நிலையத்துக்கு அண்மையில் அமைந்துள்ள பழக்கடைகளில் மருந்துகள் செலுத்தப்பட்ட பழக்கடைகளில் மருந்துகள் செலுத்தப்பட்ட பழவகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. சுகாதார பரிசோதகர்கள் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் தெரிவித்தார்.

அந்த பழக்கடைகளை மூடச் சொல்லுகின்றீர்களா? அவர்கள் விற்பனை செய்யும்போது அவ்வழியால் செல்லும் வாகனங்களின் புகைகள் பழங்கள் மீது படுகின்றன. இவ்வாறு பல பிரச்சினைகள் உள்ளன. நாம் அந்த வியாபாரிகளுக்கு தேவையான கட்டட வசதியை ஏற்படுத்த வேண்டும். பின்னர் அவர்கள் பிழை செய்தால் நாம் நடவடிக்கை எடுக்கலாம் என்று மாநகர முதல்வர் கூறினார் என்றார்.

பழங்களில் உள்ள வாகன புகையை தண்ணீரில் கழுவினால் போய்விடும். ஆனால் உள்ளே செலுத்தப்படும் மருந்தால் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று சபை உறுப்பினர் ரெமிடியஸ் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த சுகாதார வைத்திய அதிகாரி மாநகர சபையின் சுகாதார பரிசோதகர்கள் பழுதடைந்த பழங்கள் விற்பனை செய்வது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் மருந்து செலுத்திய பழங்களை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது நாம் ஆதாரம் இல்லாது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. அவற்றை ஆய்வு செய்ய எம்மிடம் ஆய்வுகூட வசதி இல்லை என்று சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளித்த சபை உறுப்பினர் செல்வவடிவேல் ஆய்வுகூடம் அமைக்க நாம் என்ன செய்ய வேண்டும் அதற்கான நிதியை எங்கிருந்து பெறலாம் என்பவற்றை ஆராயுங்கள் என கூறி இந்த விடயம் முடிவுக்கு வந்தது.

Related posts: