யாழ். பல்கலையில் 1,390 மில்லியன் ரூபா செலவில் 4 பிரிவுக்குக் கட்டடங்கள் அமைப்பு!
Friday, December 14th, 2018
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கீழ் 4 பெரும் உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு முழுமையடையவுள்ளன. அதற்கென இலங்கை அரசு ஆயிரத்து 390 மில்லியன் ரூபாவை உயர்கல்விகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைப்பினூடாகச் செலவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
400 மில்லியன் ரூபா செலவில் முகாமைத்துவக் கல்வி மற்றும் வணிக பீடத்துக்கான கட்டட அமைப்பு, 48 மில்லியன் ரூபா செலவில் உயர்மட்ட படிப்புக்கள் பீட கட்டட அமைப்பு, 700 மில்லியன் ரூபா செலவில் மருத்துவ பீடத்துக்கு 8 மாடிக் கட்டடம், 242 மில்லியன் ரூபா செலவில் பல்கலைக்கழகத்துக்கான உடற்பயிற்சிக் கட்டடம் என்பன அமைக்கப்படுகின்றன.
முகாமைத்துவக் கல்வி மற்றும் வணிக பீடத்துக்கான கட்டடத் தொகுதி, உயர் பட்டப் படிப்புக்கள் பீடக் கட்டட வேலைகள் முழுமையாக நிறைவுபெற்றன. மருத்துவ பீட மற்றும் உடற்பயிற்சிக்கூட கட்டட அமைப்பு வேலைகள் தற்போது இடம்பெறுகின்றன என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
Related posts:
|
|
|


