யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஆரம்பம்!
Wednesday, July 19th, 2023
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று ஆரம்பமான நிலையில். குறித்த பட்டமளிப்பு விழா நாளையும், நாளைமறுதினமும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் எட்டு அமர்வுகளாக நடைபெறவுள்ள இப் பட்டமளிப்பு விழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர், வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமை தாங்கி, பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிக்கவுள்ளார்.
இப் பட்டமளிப்பு விழாவில் 162 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 1885 உள்வாரி மாணவர்களுக்கும், 166 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 65 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சைட்டம் மருத்துவக் கல்வி நிறுவனத்திற்கு ரஷ்யா ஆதரவு!
திருகோணமலை இறக்ககண்டி வாழையூற்று மக்களுடன் ஈ.பி.டிபியினர் சந்திப்பு
புத்திஜீவிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி!
|
|
|


