யாழ்.பண்ணையில் தோன்றிய அம்மன் – பாலாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு!
        
                    Saturday, April 15th, 2023
            
யாழ் பண்ணை வீதியில் எழுந்தருளியிருக்கும் நாகபூசணி அம்மனின் திருவுருவத்திற்கு உருத்திர சேனையால் பாலாபிஷேகம் செய்யப்பட்டு மலர் மாலையும் சாத்தப்பட்டு வழிபாடுகள் நடாத்தப்பட்டன.
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நயினை நாகபூசணி அம்மனின் புதிய திருவுருவச்சிலை ஒன்று வைக்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் உருத்திர சேனையால் வைக்கப்பட்டமை தெரிவந்துள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் குறித்த பிரதேசத்தில் நாகபூசணி தாய் எழுந்தருளியதை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாக அமைந்துள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் பிள்ளையார் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கரவெட்டிப் பிரதேச சபைத் தவிசாளர் சாதி ரீதியாக செயற்பட்டு வருகின்றார் - ...
அச்சிடப்பட்ட  வாக்குச் சீட்டுக்கள்  தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது - அரச அச்சகம் அறிவிப...
போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையே தீர்வு -  அமைச்சர் டிரான் அலஸ் வலியுறுத்து!
| 
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                         | 
                    
  | 
                
            
        

