யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு !

Monday, June 6th, 2016
யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று திங்கட்கிழமை(06-6-2016) காலை இனந்தெரியாத  ஆண் ஒருவரின் சடலமொன்று  மீட்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தினூடாக மீட்கப்பட்ட   உடற்கூற்றுப் பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நெடுந்தீவு  தாரப்பிட்டியப்  பகுதியில் கடற்தொழிலில் ஈடுபடும்  மக்கள் குறித்த சம்பவம் தொடர்பில் நெடுந்தீவுப் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் இந்த ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணைகளை நெடுந்தீவுப் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.
6a4e3b62-e176-49dc-b646-fddc337d57ce
bee5f159-e899-428a-a635-ab6b10ec3702

Related posts: