யாழ்.நுணாவில் சந்தியில் இன்று மாலை பயங்கர விபத்து :மூவர் படுகாயம்!
Thursday, May 18th, 2017
யாழ்.நுணாவில் சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற பயங்கர விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இன்று வியாழக்கிழமை(18) பிற்பகல்- 03 மணியளவில் யாழிலிருந்து கொடிகாமம் பயணிக்கும் தனியார் பேருந்தொன்று சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பயணிகளை இறக்கிக் கொண்டு நின்றது. பருத்தித்துறை வீதியாக வந்த இராணுவத்தினரின் பேருந்து கண்டி வீதியில் பயணிகளை இறக்கிக் கொண்டிருந்த தனியார் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டது. இதன் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிளும் அத்துடன் முன்னால் வந்த கார்,மற்றும் ஹன்டர் வாகனமும் இராணுவத்தினரின் பேருந்துடன் மோதிக்கொண்டதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காகச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரிப் போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
வீடுகள் கட்டடங்களை வாடகைக்கு வழங்குவோர் கிராம அலுவலரிடம் பதியவும்!
தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு - O/L எழுதும் மாணவர்களுக்கு ஆவணப்பத்திரம்!
உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் பட்சத்தில், அவர்களது பெயர்களும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்...
|
|
|




