யாழ். நீர்வேலியில் இடம்பெற்ற கார்- மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்!

யாழ். நீர்வேலிச் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை(20) இடம்பெற்ற கார்- மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
யாழ். கோப்பாயிலிருந்து பருத்தித் துறை நோக்கிப் பருத்தித் துறை வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வைத்தியரின் கார் உள்வீதியால் பருத்தித் துறை வீதியை நோக்கித் திரும்ப முற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் இளைஞன் பயணித்த மோட்டார்ச் சைக்கிளை வைத்தியரின் கார் கடுமையாக மோதியது. இதன் காரணமாகச் சில மீற்றர் தூரம் வரை தூக்கி வீசப்பட்ட இளைஞன் படுகாயமடைந்தார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் வீதியால் சென்ற சிலரால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்துச் சம்பவத்தில் இளைஞன் பயணித்த மோட்டார்ச் சைக்கிளும், வைத்தியர் பயணித்த காரும் சேதமடைந்துள்ளன.
Related posts:
மோசமன நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு - பொது நிறுவனங்கள் தொடர்பான ந...
சுற்றுலாப் பிரதேசங்களை விரிவான திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை – துறைசார் அத...
சுங்கத்திலிருந்து விடுவிப்பு செய்யப்படாத வாகனங்களை விடுவிப்பதற்கு ஏற்பாடு - நிதி சட்டமூலம் தொடர்பில்...
|
|