யாழ்.நகர அபிவிருத்தியில் பூங்காக்களும் உருவாகும்!

யாழ்.நகர அபிவிருத்தி திட்டத்தில் பொதுமக்களை கவரும் வகையிலான பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன என்று யாழ்.மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது:
நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் முற்றவெளிப் பிரதேசம் திறந்த வெளிப் பிரதேசமாகவே சீரமைக்கப்படும். சுப்பிரமணிய பூங்கா, பண்ணைக் கடற்கரையை அண்டிய பூங்கா என்பன திறந்த வெளிப் பூங்காக்களாக அழகுபடுத்தப்படும். சுப்பிரமணியம் பூங்காவைச் சுற்றிய பாதுகாப்பு மதில்கள் அகற்றப்பட்டு திறந்த பூங்காவாக அழகுபடுத்தப்படவுள்ளது. அதனைவிட முற்றவெளிப் பிரதேசமும் திறந்த வெளியாக அழகுபடுத்தப்படும் – என்றார்.
Related posts:
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின்சாரம்!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் வறிய மக்களுக்கு மலசலகூடங்கள் அமைக்கும் நடவடிக்கை மு...
மீண்டும் சூடுபிடிக்கும் வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வுக் கொலை வழக்கு - மேன்முறையீடுகளை விசாரணை...
|
|