யாழ் நகரப் பகுதிகளில் விசேட பொலிஸார் ரோந்து நடவடிக்கை!

யாழ்.மாவட்டத்தில் பயணத்தடையை மீறி வீதிகளில் நடமாடுவோரை கண்காணிக்க இன்று காலைமுதல் பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையிலான யாழ்ப்பாண பொலிஸ் நிலைய மோட்டார் சைக்கிள் அணியினரால் யாழ் நகரப் பகுதிகளில் விசேட ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
குடா நாட்டின் முக்கிய வீதிகளில் பொலிசாரினால் ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மையில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக வீதியில் பயணிக்கும் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் பொலிசாரினால் சோதனை இடப்படுகின்றது.
அத்துடன் அத்தியாவசிய சேவை ஈடுபடுவோர் மாத்திரம் பயணத் தடை வேளையில் வீதியில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவோர் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|