யாழ். திருநெல்வேலிச் சந்திப் பகுதியில் முச்சக்கர வண்டி திருட்டு !
Wednesday, April 5th, 2017
யாழ். திருநெல்வேலிச் சந்திப் பகுதியில் வீதியில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி திருட்டுப் போயுள்ளது. நேற்றுச் செவ்வாய்க்கிழமை(04) காலை இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். தட்டாதெருவைச் சேர்ந்த வர்த்தகரொருவர் திருநெல்வேலி நகர்ப் பகுதிக்கு நேற்றைய தினம் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக வருகை தந்துள்ளார். பலாலி வீதியில் தனது முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டுப் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காகச் சென்றுள்ளார்.
பொருட்களைக் கொள்வனவு செய்த பின்னர் குறித்த வர்த்தகர் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது முச்சக்கர வண்டி தரித்து விடப்பட்ட இடத்திலிருந்து திருட்டுப் போயுள்ளமை தெரியவந்தது. சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டி உரிமையாளர் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
Related posts:
ஊதியக் கொள்கையை மாற்றுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் போர்க்கொடி!
நாடு நாளை வழமைக்கு திரும்பினாலும் தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த வாய்ப்புகள் இல்லை - தனியார்...
“அரசியலின் மறைக்கப்பட்ட கதைகள் கூறும் கதை” நூல் கௌரவ பிரதமருக்கு வழங்கி வைப்பு!
|
|
|


