யாழ். குடாவில் அதிகரிக்கிறது டெங்கு : நேற்று முன்தினம் வரை 422 பேர் பாதிப்பு!

Saturday, January 19th, 2019

டிசெம்பர் மாதத்தைத் தொடர்ந்து ஜனவரி மாதமும் டெங்கு நோயின் தாக்கம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் காய்ச்சலுடன் ஜனவரியில் முதல் 16 நாள்களில் மட்டும் 499 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் மூன்று நாள்களுக்கு மேலாக நீடிக்குமாயின் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு மாவட்டங்களில் டெங்கு நோய் தீவிரமாக பரவுவதால் டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் வழிமுறைகளை உடனடியாகப் பின்பற்றுமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 16 நாள்களில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

காய்ச்சல் மூன்று நாள்களாகத் தொடர்ந்தால் தாமதமின்றி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுங்கள் என்று தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பார்த்தீனியச் செடியைப் போன்றே டெங்கு நோயும் ஒழிக்கமுடியாத ஒன்றாக உருவெடுத்துள்ளது.

Related posts: