யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !

மின் விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை(26) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, வீமன்காமம், மாவடி, மூளாய், பொன்னாலை, நெடுந்தீவு , பொக்கணை, கெருடாவில், தொண்டைமானாறு, அக்கரை, மயிலியதனை, சிதம்பரா வடக்கு, வருத்தலைவிளான், காங்கேசன்துறை கரிசன் ஐந்தாவது படைமுகாம், காங்கேசன்துறை வடக்கு கடற்படை முகாம், பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம், மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம், பலாலி இலங்கை விமானப்படை முகாம், பலாலி விமானப்படை ஓய்வு கால விடுதி, மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம்(புதியது) ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கைக்கு நவீன ஆயுதங்களை வழங்கும் ரஷ்யா!
கல்வியியல் கல்லூரிகளுக்கு 8000 மாணவர்கள் இணைப்பு!
வவுனியா வளாகத்தில் மருத்துவபீடத்தை உருவாக்குங்கள் - யாழ்.போதனா பிரதி பணிப்பாளர் கோரிக்கை!
|
|