யாழ்ப்பாண பொலிஸாரின் விடுமுறை இரத்து!

யாழ்.மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இன்றுமுதல் (27) மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண மூத்த பிரதிக் காவற்துறை மா அதிபர் ரொசான் பெர்னாந்து, சகல காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இந்தக் கட்டளையை வழங்கினார்.
கொக்குவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடித் தனங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரைக்கு எவரையும்கைது செய்யாததால் காவற்துறையினரின் விடுமுறைகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
தரம் 5 புலமைப் பரிசில் மேன்முறையீடு 15ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும்!
நாட்டின் சகல பாடசாலைகளிலும் ஆளணி, பௌதிகவளங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – பிரதமர்!
தேர்தல் சட்டம் மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு!
|
|