யாழ்ப்பாணம் வந்தடைந்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு, இன்று (09) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.
பலாலிக்கு விமானம் மூலம் வந்த ஜனாதிபதி, அங்கிருந்து உலங்கு வானூர்தியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தை வந்தடைந்தார்.
யாழ். மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு தின சிறப்பு நிகழ்வுகளை சிறப்பிக்கும் வகையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பின் பேரில் குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளதுடன் யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் நடைபெறும், போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, தொடர்ந்து துரையப்பா விளையாட்டரங்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரயில் விபத்துக்களை தடுக்க நீண்டகால பாதுகாப்புத் திட்டம்!
அரச மற்றும் தனியார் அலுவலக நேரத்தில் மாற்றம் கொண்டுவர தீர்மானம் - ஜனாதிபதி கோட்டாபய!
தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் முடக்கப்பட...
|
|