யாழ்ப்பாணம் பொது நூலகம் எரியூட்டப்பட்டு இன்றுடன் 39 ஆண்டுகள் நிறைவு!

Monday, June 1st, 2020

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 39 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் 20 ஆம் நூற்றாண்டின் தமிழ் கலாச்சார இனப்படுகொலை என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 39 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். இதை நினைவுகூரும் வகையில் யாழ் நூலகத்தில் இன்றையதினம் அனுஷ்ட்டிக்கப்பட்டது.

அத்துடன்ட யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்படட போது படுகொலை செய்யப்படடவர்களுக்கு யாழ்ப்பாணம் நூலக வளாகத்தில் இன்று அஞ்சலி செய்யப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர், செயலாளர் ஊழியர்கள் ஆகியயோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

முன்பதாக 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்திலிருந்த அமைச்சரொருவரின் தலைமையில் அனுப்பப்பட்ட வன்முறைக் குழுவொன்றினால் தீயூட்டப்பட்டது.

யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட காலகட்டத்தில், அங்கு சுமார் 97 ஆயிரம் அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது. இந்நிலையிலேயே நுலகம் எரிக்கப்பட்டது. இதன்போது நூலகத்திலிருந்த பல பாரம்பரிய நூல்கள் தீயினால் அழிவடைந்தன.

யாழ்ப்பாண நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் மக்களின் ஆதரவுடன் அது வளர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்ற நூல்கள், நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பழமையான பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்த நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் எரியூட்டப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி சந்திரிகா அவர்களின் ஆட்சிக்காலத்தில் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சராக இருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்  தேவானந்தா அழிந்துகிடந்த தமிழர் அறிவு பொக்கிசத்தை மீளவும் புதுப்பொலிவு கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

இதை தடுத்து நிறுத்த முற்பட்ட அன்றைய தமிழரசுக் கட்சியினர் எரிந்து கிடக்கும் நூலகத்தை அழிவின் சின்னமாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல காரணங்களை அரசியல் பிண்ணணியுடன் இருந்து தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

அதுமட்டுமல்லாது தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பிலான முதல்வர் செல்லன் கந்தையன் யாழ் மாநகரின் முதல்வராக இருந்த அன்றைய காலகட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது தற்துணிச்சலான செயற்பாடுகளூடாக அழிந்துகிடந்த நூலகத்தை மீண்டும் புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு அழிவின் அடையாளமாக இருப்பதை விட அறிவின் பொக்கிசமாக இருக்கட்டும் எனக் கூறி அதை நிறைவேற்றியும் காட்டினார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இந்த முயற்சியின் காரணமாக இன்று புதுப்பொலிவு பெற்று விழங்கும் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் தற்போது 1 இலட்சத்து 8 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் காணப்படுவதாக அதன் நூலாளர் சுதந்தி சதாசிவமூர்த்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: