யாழ்ப்பாணம் பிரதேச பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பொது அமைப்புகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது இவ்வருடத்திற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் தளபாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் தலைமையிலான கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு கழகங்களின் நிர்வாகத்தினரிடம் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.
கலைவாணி சனசமூக நிலையம், வண்ணார்பண்ணை மாதர் அபிவிருத்தி சங்கம், யங் கிரிஸ்ரியன் அமைப்பு, பாலர் கல்விக் கழகம், ஆரியகுளம் முற்போக்கு வாலிபர் கழகம், சென்.நிக்கிலஸ் சனசமூக நிலையம், கன்னப்புலம் மாதர் கிராமிய அபிவிருத்தி சங்கம் ஆகிய பொது அமைப்புகளுக்கே குறித்த தளபாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன
இதன்போது கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|